சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் சூதாட்டம் புகார் எழ, 2015ம் ஆண்டு வெளியான தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதமே அந்த அணிகளுக்கான தடைக்காலம் முடிவடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ளன.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில், ஏலம் குறித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய அணியில் இருந்து 5 வீரர்களை அந்தந்த அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என்.சீனிவாசன்,

'ஐபிஎல் போட்டியில் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும்' என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி மீண்டும் திரும்புவது உறுதியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்