உலக சாதனையை தவறவிட்ட கோஹ்லி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் ஓட்ட இயந்திரமுமான விராட் கோஹ்லி அரிய உலக சாதனை ஒன்றை தவறவிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் அதிகமான ஓட்டங்களை குவித்தவரான குமார் சங்ககாராவின் சாதனையே அதுவாகும்.

இலங்கையின் சங்ககாரா 2014 ம் ஆண்டு அனைத்துவகையான போட்டிகளிலும் 2868 ஓட்டங்களைக் குவித்துள்ளமையே இதுவரைக்குமான உலக சாதனையாகும்.

இலங்கையுடனான போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் கோஹ்லி சதமடித்திருப்பாராயின் புதிய சாதனை படைத்திருக்கலாம், ஆனால் நேற்றைய போட்டியில் கோஹ்லி 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்த காரணத்தால் சங்ககாராவின் சாதனையை முறியடிக்க முடியாதுபோயுள்ளது.

இந்தாண்டில் இந்தியாவுக்கு இன்னும் 3 ஒருநாள் போட்டிகளும், 3 T20 போட்டிகள் இருந்தாலும் அவற்றில் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் 75.64 எனும் சாராரியில் 5 சதம் அடங்கலாக 1059 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 76.84 எனும் சராமாரியில் 6 சதம் அடங்கலாக 1460 ஓட்டங்களையும் T20 போட்டிகளில் 299 ஓட்டங்களையும் குவித்துள்ள கோஹ்லி மொத்தமாக்க இந்தாண்டில் 2818 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்