மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறைவாக பந்து வீசியதால், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஓர் டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 67 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பந்து வீசாமல், 3 ஒவர்கள் குறைவாக பந்து வீசியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர் கிறிஸ் பிராட், மேற்கிந்திய

தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீத தொகையை அபராதமாகவும் விதித்துள்ளார்.

மேலும், அணியின் மற்ற வீரர்களுக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீத தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை மூலம், ஹாமில்டனில் 9ஆம் திகதி தொடங்க உள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் ஜேசன் ஹோல்டர் விளையாட முடியாது.

கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் இதே தவறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்