இரண்டாவது டெஸ்டிலும் அபாரமாக வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 120 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்கியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 442 ஒட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 126 ஒட்டங்களும், டிம் பெயின் 57 ஒட்டங்களும்,

கவாஜா 53 ஒட்டங்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 227 ஒட்டகளுக்கு ஆல் அவுட் ஆனது. அவுஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்மூலமாக 215 ஒட்டங்கள் முன்னிலைப் பெற்ற அவுஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 138 ஒட்டங்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், வோக்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 354 ஒட்டங்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் முதலில் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ஒட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில், ஜோ ரூட் 67 ஒட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, மற்ற துடுப்பாட்ட வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 233 ஒட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் அவுஸ்திரேலியா 120 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா தரப்பில், சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...