குழப்பத்தில் இலங்கை அணி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 10 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திசாரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்கரமா, லஹிரு திரிமானே, மேத்யூஸ், அசேலலா குணரத்னே, சதுரங்கா டி சில்வா, சசித் பதிரானா, அகிலா தனஞ்ஜெயா, வாண்டர்சே, துஷ்மந்தா சமீரா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், போட்டியில் விளையாடுவதற்காக நேற்றிரவு கொழும்பு விமான நிலையம் வந்த இலங்கை வீரர்களை திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, அணி தேர்வு குறித்து அதிருப்தி அடைந்ததால், வீரர்களின் இந்தியா வருகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களில் இரண்டு பேரை, மாற்ற இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஜெயசேகரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணி சமீப காலமாக மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நிகழாண்டில் 21 ஒருநாள் போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இலங்கை அணி, வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இலங்கை அணி நிர்வாகத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers