ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்களை விரட்டி..விரட்டி சண்டை போடும் ஸ்மித்: நடுவர் பட்ட பாடு

Report Print Santhan in கிரிக்கெட்
391Shares
391Shares
ibctamil.com

அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை தொடர்ந்து வம்புக்கு இழுத்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து இப்போட்டியின் போது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோருடன் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தார்.

56.3-வது ஓவரின் நடுவே, ஸ்மித் ஆண்டர்சனை ஆக்ரோஷமாக சண்டைக்கு இழுக்க, களத்தில் இருந்த நடுவர் அலிம்தார், குறுக்கிட்டு சமாதானம் செய்தார், ஆனாலும் இருவரும் வாக்குவாதத்தை நிறுத்துவதாக இல்லை.

இதனால் ஒரு கட்டத்தில் அலிம்தார் இருவருக்கு இடையில் நின்று சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்