ஆஷஸ் தொடரில் நடந்த சுவாரஸ்யம்: மைதானத்தில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த காதல் ஜோடி

Report Print Santhan in கிரிக்கெட்

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷ்ஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இளைஞர் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகள் பிரிஸ்போனில் மோதி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 302 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்படி ஆஷஸ் போட்டி அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், போட்டியை காண வந்த இளைஞர் ஒருவர் தன் காதலை பெண் தோழி ஒருவரிடம் தெரிவிக்கிறார்.

இது அங்கிருக்கும் திரையில் காட்டப்பட்டதால், அனைவரின் கவனமும் அங்கு சென்றது. அந்த இளைஞனின் காதலை, அப்பெண்ணும் ஏற்றுக் கொண்டார், அதன் பின் மோதரமும் மாற்றி கொண்டு, ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்து, தங்கள் அன்பை பறிமாறிக் கொண்டனர்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்