இலங்கை தொடரில் வீரர்களுக்கு இடையூறாக இருந்த கேமரா: ரோகித் சர்மாவின் செயல்

Report Print Santhan in கிரிக்கெட்

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, வீரர்களுக்கு இடையூறாக இருந்த ஸ்பைடர் கேமராவை ரோகித் சர்மா தாவிச் சென்று பிடிப்பது போல் செய்கை செய்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, டிரஸிங் இடைவெளி விடப்பட்டது.

What’s up Hitman? @rohitsharma45

A post shared by Team India (@indiancricketteam) on

அப்போது போட்டியை வீடியோ எடுக்கும் ஸ்பைடர் கேமரா கீழே இறக்கப்பட்டது. ஆனால் வீரர்கள் களத்திற்கு திரும்பிய பின்னும் கேமிரா மேலே கொண்டு செல்லாமல் வீரர்களுக்கு இடையூறாக இருந்ததைக் கண்ட, இந்திய வீரர் ரோகித் சர்மா, அதை தாவிச் சென்று பிடிப்பது போலும், தொங்குவது போலும் செய்கை செய்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்