இலங்கையின் அணித்தலைவராய் மீண்டும் மெத்யூஸ்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணித்தலைவராக செயல்படும் உப்புல் தரங்கவை அணித்தலைமையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என தகவல்கள் வெளியாகின்றன.

இலங்கை அணியின் அண்மைக்கால தொடர்ச்சியான தோல்விகளைக் கருத்தில்கொண்டுஇ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்பாவே தொடருக்கு பின்னர் அணித்தலைமையிலிருந்து மத்தியூஸ் விலகிக்கொள்ளஇ அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட தரங்கவின் தலைமையில்இ இலங்கை அணி 22 ஒருநாள் போட்டிகளில் வெறுமனே நான்கில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இதன் காரணத்தால் தரங்கவுக்கு பதிலாக மீண்டும் மத்தியூஸை அந்த பதவியில் நிலைநிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்கு மத்தியூஸ் தயாரில்லையாயின்இ அசேல குணரட்ன அல்லது திசர பெரேரா ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாகவும் அறியவருகின்றது.

இளம் வீரர் நிரோஷன் டிக்வெல்லவையும் எதிர்கால தலைவராக வளர்த்தெடுக்கும் நடவடிக்கைகள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்