கோலாகலமாக நடைபெற்ற புவனேஸ்வர் குமார் திருமணம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு, உத்தரப்பிரதேசத்தில் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

புவனேஸ்வர் குமாருக்கும், அவரது நீண்ட நாள் தோழியான நுபுர் நாகருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் அவரின் திருமணம் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், இருதரப்பு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், அவரின் மெகந்தி மற்றும் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 26ஆம் திகதி புலந்த்சஹரிலும், நவம்பர் 30ஆம் திகதி டெல்லியிலும் நடைபெற உள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள், டெல்லியில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கலந்து கொண்ட புவனேஸ்வர் குமார், திருமணத்திற்காக ஏனைய போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்