இந்தியாவுக்கு நெத்தியடி: கெத்தாக பேசிய இலங்கை தலைவர் சண்டிமால்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு நெத்தியடி கொடுப்போம் என இலங்கை தலைவர் தினேஷ் சண்டிமால் கூறியுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது.

இந்த போட்டி குறித்து இலங்கை அணியின் தலைவர் சண்டிமால் கூறுகையில், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பல பாடங்களை கற்றுக்கொண்டோம்.

அதை நிச்சயமாக இலங்கை வீரர்கள் திரும்ப செய்ய மாட்டார்கள், இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றவே வந்துள்ளோம்.

கொல்கத்தா ஆடுகளத்தை விட நாக்பூர் ஆடுகளத்தில் புற்கள் குறைவாகவே உள்ளது. நிச்சயம் இந்திய அணிக்கு இரண்டாவது டெஸ்டில் நெத்தியடி கொடுப்போம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்