டிக்வெல்லேவின் வேடிக்கையான நடத்தையை பார்த்து ரசித்தேன்: ஜெயவர்த்தனே

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கை- இந்தியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக டிராவில் முடிந்தது.

டெஸ்ட் போட்டியில் நேற்றைய கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால், 231 ஓட்டங்கள் இலக்கை துரத்திய இலங்கை 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த போட்டியின் போது இலங்கை வீரர் டிக்வெல்லின் செயலால் முகமது ஷமி மற்றும் விராட் கோஹ்லி கோபமடைந்தனர்.

ஏனெனில், 19 வது ஓவரின் இரண்டாவது பந்தை முகமது ஷமி வீச முற்றபடும்போது. அதனை எதிர்கொள்ள டிக்வெல்ல தயாராகவில்லை. இதனால் கையை காட்டி பின்னோக்கி செல்லுங்கள் என கூறியுள்ளார்.

இதனால், கோபம் கொண்ட ஷமி, டிக்வெல்லிடம் சென்று ஏதோ வார்த்தைகளை கூறியுள்ளார். அப்போது நடுவர் புகுந்து சமாதானம் செய்துள்ளார்.

அப்போது முகமது ஷமி வீசிய பந்தை கேட்ச் பிடிக்கும் வகையில் டிக்வெல்ல அடித்தபோது கோஹ்லி அதனை தவறவிட்டார்.

அதன்பின்னர், மீண்டும் ஷமி பந்தவீச முற்படும்போது, தான் பந்தை எதிர்கொள்ள தயாராகவில்லை என்று டிக்வெல்ல கூறியதை கேட்டு கோபமடைந்த கோஹ்லி விரைந்து வந்து அவருடன் சண்டையிட்டுள்ளார்.

தனது அணியை தோல்வியில் இருந்து காக்கவே இவ்வாறு செய்கிறார் என கூறியுள்ளார். இதனைப்பார்த்த நடுவர் மீண்டும் வந்து இரு அணியினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னால் வீரர் ஜெயவர்த்தனே தனது டுவிட்டர் பக்கத்தில், டிக்வெல்வேவின் அணுகுமுறை மற்றும் வேடிக்கையான நடத்தையை பார்த்து ரசித்தேன், டெஸ்ட் மேட்ச் சிறப்பாக இருந்தது.

மேலும் சதம் அடித்த கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்