கடைசியில் மிகவும் பதட்டமாக இருந்தது.. டிக்வெல்லா தவறு செய்யவில்லை: சண்டிமால்

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், நாங்கள் தோல்வியை விரும்பவில்லை என்று இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்திய அணி, திடீரென்று இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்தது, இலங்கை அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியது.

ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியதால், இந்திய அணி எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது போட்டி டிராவில் முடிந்தது.

இது குறித்து இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் கூறுகையில், இந்திய அணி அற்புதமான பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது, மூன்று வீரர்கள் மூன்று விதமாக வீசுகின்றனர்.

நான் சந்தித்த சிறப்பான பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்று, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் முடிந்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக வந்தோம்.

ஆனால் ஆட்டத்தின் எங்கள் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், கடைசி ஓவர்களில் மிகவும் பதட்டம் ஏற்பட்டது.

நாங்கள் போட்டியை இழக்க விரும்பவில்லை, அதன் காரணமாகவே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். போட்டியின் போது டிக்வெல்லாவிற்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

டிக்வெல்லா போட்டியை விரும்புபவர், களத்தில் தன்னை யாராவது பார்த்தலே அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்புவார், எனக்கு அவர் தவறு செய்தது போல் தெரியவில்லை.

ஒவ்வொரு வீரர்கள் கேள்வி கேட்டனர், அதற்கு டிக்வெல்லா பதில் தானே அளித்தாரே தவிர தவறு எதுவும் செய்யவில்லை, இதில் நான் தலையிடவும் விரும்பவில்லை, போட்டியின் போது இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வழக்கம் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்