வானமே எல்லை: கோஹ்லிக்கு புகழாரம் சூட்டிய ரவி சாஸ்திரி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது, இதில் வீராட் கோஹ்லி 104 ஓட்டங்கள் எடுத்தார்.

சர்வதேச போட்டிகளில் கோஹ்லி 50 சதங்களை அடித்து சாதனை படைத்தார், எனவே விரைவில் அவர் சச்சினின் சாதனையை முறியடிக்கலாம் என கூறப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி, கோஹ்லி அற்புதமான வீரர், இந்த வயதிலேயே 50 சதங்களை கடந்துள்ளார்.

இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், முதல் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் வீராட் கோஹ்லிக்கு வானமே எல்லை எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்