இலங்கை வீரரால் செய்ய முடிந்தது.. இந்திய வீரர்களால் ஏன் செய்ய முடியவில்லை?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா மோசமான சாதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

கொல்கத்தாவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் தடுமாறிய இந்திய அணி, அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்தது. இருப்பினும் நூலிலையில் இலங்கை அணி தப்பியது.

இந்நிலையில் இப்போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இலங்கை அணியில் ஹெராத், தில்ருவான் பெரேரா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்திய அணி இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 17 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது, அந்த 17 விக்கெட்டுகளுமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான் எடுத்திருந்தனர், அஸ்வின் மற்றும் ஜடேஜா விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.

ஆனால் இலங்கை அணி பக்கம் பார்த்தால் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

டெஸ்ட் போட்டியில் இந்திய மண்ணில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாதது இதுவே முதல்முறையாகும். இந்த மோசமான சாதனைக்கு சுழற்பந்து உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்