மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, தேசிய கீதம் பாடும் போது சுவிங்கத்தினை மென்றது சர்ச்சையாகியுள்ளது.

விராட் கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரராக பல்வேறு சாதனைகள் படைத்து வந்தாலும், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குகிறார்.

கொல்கத்தாவில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. ஆட்டம் துவங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சுவிங்கத்தினை மென்றவாறே தேசிய கீதம் பாடியுள்ளார்.

இந்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பும், இதேபோல இந்திய அணி வீரர் பர்வேஷ் ரசூல், கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சுவிங்கம் மென்றது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...