இது வெறும் தொடக்கம்தான்: இலங்கை பயிற்சியாளர் அதிரடி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்களின் செயல்பாடு வெறும் தொடக்கம் தான், வேலை இன்னும் முடியவில்லை என பயிற்சியாளர் ரத்நாயக்கே கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. எனவே, பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய ஆட்டம் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது.

இலங்கையின் அபார பந்து வீச்சினால், இந்திய அணி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஆறு ஓவர்கள் வீசி ஒரு ஓட்டம் கூட கொடுக்காமல் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இதனைத்தொடர்ந்து இலங்கை பயிற்சியாளர் கூறுகையில், ‘இந்தியாவிற்கு வருவதற்கு முன், எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை, அதனால் எங்கள் அணி வீரர்கள் சவாலுக்கு தயாராகினர்.

லக்மலின் பந்துவீச்சு, நான் பார்த்ததில் மிகவும் சிறந்ததாகும், ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது. ஆனால், எங்களது வேலை இன்னும் முடியவில்லை.

இந்திய அணியை 200 ஓட்டங்களுக்குள் நாங்கள் கட்டுப்படுத்தி விடுவோம். ஆனால், இது இரு அணிகளின் ஆட்டங்களை பொறுத்து மாறுபடலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...