இலங்கை கிரிக்கெட் தொடரில் சிக்கிய வீரர்: பவுலிங் வீச தடை விதித்தது ஐசிசி!

Report Print Raju Raju in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் பவுலிங் செய்த போது சர்ச்சைக்குரிய முறையில் பந்து வீசுவதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதன் காரணமாக கடந்த 2015 யூலை மாதம் ஹபீஸுக்கு 12 மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிக்கப்பட்டது.

பின்னர் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி பங்கேற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இவரது பந்துவீச்சு ஆக்‌ஷனில் சர்ச்சை எழுப்பப்பட்டது.

இதனால், தற்போது இவரது பவுலிங் ஆக்‌ஷனை ஐசிசி சோதனை செய்தது.

இதில் ஹபீஸ் கை, பந்து வீசும் போது அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியை விட அதிகமாக இருப்பது உறுதியானது,

இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...