இந்தியாவுக்கு முட்டுகட்டை போடும் தகுதி இலங்கைக்கு இல்லை: அர்னால்டு ஓபன் டாக்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முட்டு கட்டை போட தென் ஆப்பிரிக்கா அணியால் தான் முடியும் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் அர்னால்டு கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கியது.

மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால், முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அர்னால்டு, இந்திய அணி தற்போது மிகச்சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது.

இந்த பாதையில் முட்டுக்கட்டை போடும் தகுதி, இலங்கை அணிக்கு இல்லை. ஆனால் இந்திய அணிக்கு உண்மையான சவாலே தென் ஆப்ரிக்க மண்ணில் தான் உள்ளது. அது தான் உண்மையான சவால் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...