கோஹ்லி படைத்த மோசமான சாதனை!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்திய அணித்தலைவராக வீராட் கோஹ்லி மோசமான சாதனையை பதிவுசெய்துள்ளார், அதாவது ஒரே ஆண்டில் ஓட்டங்கள் ஏதும் பெறாமல் அதிக முறை ஆட்டமிழந்ததே அந்த சாதனையாகும்.

கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுவரும் போட்டியில் சுரங்க லாக்மாலின் பந்துவீச்சில் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் கோஹ்லி ஆட்டமிழந்தார்.

இத்துடன் இந்த ஆண்டு மட்டும் ஆறு தடவை ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கபில்தேவ் 1983 காலப்பகுதியில் ஒரேயாண்டில் 5 தடவைகள் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்ததே இதுவரையிலும் சாதனையாக இருந்து வந்தது, இந்த மோசமான சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.

இப்பட்டியலில் பிக்ஷன் சிங்க் பேடி, டோனி, சவுரவ் கங்குலி ஆகியோர் தலா 4 தடவைகள் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்த இந்திய தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்