கோஹ்லி டக் அவுட்.. முதல் பந்திலே இந்தியா காலி: கொல்கத்தா டெஸ்டில் அசத்தி வரும் இலங்கை

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

கொல்கத்தாவில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருவதால், போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்ததால், போட்டி தடைபட்டது, அதன் பின் மதிய இடைவெளிக்கு பின்னர் ஆட்டம் துவங்கியது.

அதன் படி நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது, இதற்கு இலங்கைக்கு கை மேல் பலன் கிடைத்தது.

ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே கே.எல்.ராகுலை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் வெளியேற்றினார்.

இதைத் தொடர்ந்து தவானை 8 ஓட்டங்களிலும், அணியின் தலைவரான விராட் கோஹ்லியை டக் அவுட்டிலும் லக்மல் வெளியேற்றினார்.

இதனால் சற்றுமுன் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers