பகையை மறந்து புன்னகையுடன் கைகுலுக்கிய ஜாம்பவான்கள்: வைரலாகும் புகைப்படம்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர்களான சவுரவ் கங்குலி மற்றும் ரவிசாஸ்திரி கைகுலுக்கி கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியா கடந்தாண்டு செப்டம்பர் 20ம திகதி மாரடைப்பால் காலமானார்.

இவரது ஒரு வருட நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த 14ம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர், அப்போது முன்னாள் அணித்தலைவர்களான சவுரவ் கங்குலி மற்றும் ரவி சாஸ்திரி கைகுலுக்கி கொண்டனர்.

இருவரும் பரம எதிரிகளாக பார்க்கப்படும் நிலையில், இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தன்னை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அனில் கும்ப்ளே நியமிப்பதில் கங்குலி முக்கிய பங்கு வகித்ததாக ரவி சாஸ்திரி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து சிறந்த கிரிக்கெட் தலைவர்களை பட்டியலிடும் போது வேண்டுமென்றி கங்குலியின் பெயரை தவிர்த்திருந்தார்.

இச்சம்பவத்திலிருந்து இருவருக்கும் பகைமை நீடித்து வந்த நிலையில், இருவரும் நட்பாக கைகுலுக்கி கொண்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers