10 முதல் 15 வருடங்களுக்கு பிறகு இந்தியா சென்றுள்ள இலங்கை அணியில் ஏற்பட்ட மாற்றம்?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியா சென்றுள்ள இலங்கை அணியில் எந்த ஒரு வீரருக்கும் சிறிய அளவிலான காயம் கூட இல்லை என்று இலங்கை அணியின் ஆலோசகரான அர்ஜுனா டி சில்வா கூறியுள்ளார்.

இலங்கை அணியில் சமீபகாலமாக வீரர்கள் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அணியின் நட்சத்திர வீரரான மேத்யூசும் காயம் காரணமாக கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த ஜுலை மாதம் இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது இலங்கை வீரர்களான தினேஷ் சண்டிமால், குணரத்னே மற்றும் சுழற்பந்து பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது, இதனால் இலங்கை அணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் ஆலோசகாரான அர்ஜுனா டி சில்வா இந்தியா சென்றுள்ள இலங்கை அணியில் ஒரு விரர் கூட சிறிய அளவிலான காயத்துடன் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 10 முதல் 15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி ஜுரோ இன்சுரியுடன் சென்றுள்ளது. இந்திய அணிக்கு எதிரான தொடர்களில் மொத்தம் 42 வீரர்களை தெரிவு செய்தோம், அவர்கள் அனைவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் கூட இல்லை.

ஒரு அணி ஒரு தொடரில் விளையாடும் போது, 10 முதல் 15 சதவீதம் காயத்துடன் தான் களமிறங்கும், ஆனால் இந்த முறை நம்மணியில் அப்படி இல்லை, இதற்காக நாம் மருத்துகுழுவை பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...