என் சதையை வெட்டினால் ரத்தம் வடியும்: கோஹ்லி ஆவேசமாக பேசியது ஏன்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

பிசிசிஐ-யின் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தும் திட்டம் இந்திய அணிக்கு ஆரோக்கியமான ஒன்று என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.

மற்ற நாடுகளின் அணிகளை விட, இந்திய அணி அதிக போட்டிகளில் இந்தாண்டு விளையாடியுள்ளது. இதனால் வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவை.

அந்த வகையில் எனக்கும் கண்டிப்பாக ஓய்வு அவசியம். நான் ஒன்றும் ரோபோ கிடையாது. என் சதையை வெட்டி சோதனை செய்து பார்த்தால் ரத்தம் வடியும்.

எனக்கு டிசம்பர் மாதம் விடுமுறை தேவை. அதற்காக முன்னரே பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளேன் என கோஹ்லி கூறியுள்ளார்.

கோஹ்லி டிசம்பர் மாதத்தில் விளையாட மாட்டார் என்பதால் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியல் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது டெஸ்ட் போட்டியில் ரஹானே அணி தலைவராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...