ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் வீரர்: காரணம் இதுதான்

Report Print Kabilan in கிரிக்கெட்
197Shares
197Shares
ibctamil.com

பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அஜ்மல், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.

ஆனால் பலமுறை அவரின் பந்து வீசும் விதம் சர்ச்சைக்குள்ளானது, பந்தை எறிவதாக கூறி பலமுறை அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் தடைக்குப் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியவரால் பழைய பார்முக்கு வரமுடியவில்லை.

இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அஜ்மல் அறிவித்துள்ளார்.

35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்