மிரட்டிய 360 டிகிரி டிவில்லியர்ஸ்: 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்
645Shares
645Shares
ibctamil.com

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரைப் போன்று தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் டைட்டன்ஸ் மற்றும் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்த போது மழைக்குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டது. பின் டைட்டன்ஸ் அணிக்கு 15 ஓவரில் 135 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய டைடன்ஸ் அணிக்கு குயிண்டான் டி காக் (39 ) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த டி வில்லியர்ஸ், தனது வழக்கமாக ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தி, 19 பந்தில் அரைசதம் விளாசினார்.

இவருக்கு அல்பி மோர்கல் (41) இவருக்கு நல்ல கம்பெனி கொடுக்க, டைட்டன்ஸ் அணி 11.2 ஓவரில் இலக்கை எட்டியது. இதன் மூலம் டைட்டன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் இப்போட்டியில் டிவிலியர்ஸ் மொத்தமாக 5 சிக்சர்கள் விளாசினார். டி-20 அரங்கில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ் 7வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்