இந்திய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயன்றேன்... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பந்து வீச்சாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்
310Shares
310Shares
ibctamil.com

இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக உள்ள குல்தீப் யாதவ், இந்திய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் இடத்தை பிடித்துள்ள குல்தீப், சிறந்த சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குல்தீப் யாதவ் கூறுகையில்,

எனக்கு 13 வயது இருந்தபோது, நான் வீசிய பந்துகள் அனைத்து வைட் பந்துகளாக சென்றதால் பள்ளி அணி, 18 வயதுக்குட்பட்டோருக்கான அணி என அனைத்து விதமான அணிகளில் இருந்தும் நீக்கப்பட்டேன்.

அதனால், இந்திய அணியில் விளையாட மாட்டேன் என தோன்றியது. மைதானத்தில் இருந்து வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொள்ள சென்றேன். ஆனால், நல்லவேளையாக அந்த முயற்சி கைகூடவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், அணியில் சேர்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மிகவும் துன்பப்பட்டுக் கொண்டு இருந்ததால் கிரிக்கெட்டை விட்டே போய் விடும் எண்ணத்தில் இருந்ததாகவும்,

தன்னை அணியில் சேர்த்தது தனது பந்து வீசும் முறை எனவும், அதற்கு காரணமாக இருந்தது அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேயின் பந்து வீசும் விதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்தவர் குல்தீப் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்