ஆசிய கிண்ணப் போட்டியில் அசத்திய இலங்கை பந்துவீச்சாளர்: அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
452Shares
452Shares
ibctamil.com

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மலேசியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின, நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்தது, போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக போயகோடா 84 பந்தில் 53 ஓட்டங்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி பிரவின் விக்ரமனின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 135 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஆப்கானிஸ்தானை ஆட்டம் காண வைத்த பிரவீன் ஜெயவிக்ரம 6.5 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார், ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்