இலங்கை வீரர் மேத்யூஸ் செயல்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்
416Shares
416Shares
ibctamil.com

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் பந்து வீசமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் கடந்த 12 மாதங்களுக்கு மேலாகவே தொடர் காயங்களால் அவதிப்பட்டு வருவதால் பல முக்கிய போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேத்யூஸ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிகளில் மேத்யூஸ் பந்துவீச மாட்டார் என இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் மேத்யூஸ் துடுப்பாட்ட வீரராக மட்டும் களமிறங்குவார், பந்து வீச்சாளராக அணிக்கு செயல்பட மாட்டார்.

சில காலமாகவே அவர் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசவில்லை. கடந்த யூலை - செப்டம்பரில் இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பந்து வீசிய மேத்யூஸ், டெஸ்ட் தொடரில் பந்துவீசவில்லை என்பதை ருமேஷ் நினைவுகூர்ந்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக நடைபெற்ற போர் பிரசிடெண்ட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் மேத்யூஸ் பந்துவீச்சாளராக ஒரு பந்தை கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்