டோனியை பற்றிய பேசிய இந்திய வீரர்: ரசிகர்கள் கேட்ட நறுக் கேள்விகள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர், டி20 போட்டி குறித்து டோனியை விமர்சித்ததால், அவரது ரசிகர்கள் டுவிட்டரில் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.

இந்திய அணியின் வெற்றித்தலைரான டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டோனியின் ஆட்டம் சமீபகாலமாக மந்தமாக இருப்பதால், அவர் டி20 போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும், அவர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனவும் முன்னணி வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர் டோனி, டி20 போட்டியிலிருந்து விலகி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


அகார்கரின் இந்த கருத்துக்கு டோனியின் ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில், டோனி பற்றிய உங்களது கருத்து உங்கள் ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீங்கள் டோனி மதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். டோனியைப் பற்றி உங்கள் கருத்து உள்ளூர் எம்.எல்.ஏ, பிரதமர் மீது விமர்சனம் வைப்பது போல் உள்ளது.

டோனியை நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் தாங்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதை யோசிக்கட்டும். அவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்கள், அஜித் அகார்க்கர் போல் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers