டுவிட்டரில் மாற்றம்: இலங்கை வீரர்களின் பெயர்களை ஐசிசி எப்படி வெளியிட்டிருக்கு தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
534Shares
534Shares
ibctamil.com

சமூகவலைத்தளமான டுவிட்டரில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் காரணமாக, ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை வீரர்களின் முழுப்பெயரையும் பதிவிட்டுள்ளது.

டுவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே எழுத முடியும் என்பதால், அதன் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை எழுந்தது.

அதன் பயனாக டுவிட்டர் நிறுவனமும் சமீபத்தில் 140 எழுத்துக்கள் என்பதை 280 ஆக நீடித்தது. இதன்மூலம் தற்போது டுவிட் செய்பவர்கள் விரிவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை வீரர்களின் பெயர்களை சுருக்கமாகத் தான் எழுதும்,ஏனெனில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பொதுவாக மிகவும் நீளமாக இருக்கும், இதன் காரணமாகவே சுருக்கி எழுதி வந்தது.

தற்போது டுவிட்டர் நிறுவனம் எழுத்துக்களை 280-ஆக உயர்த்தியுள்ளதால், இலங்கை வீரர்களின் முழுப் பெயரையும் ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஸ் பெயரை, 56 எழுத்துக்கள் கொண்ட Warnakulasuriya Patabendige Ushantha Joseph Chaminda Vaas என முழுப்பெயரையும், 48 எழுத்துக்கள் கொண்ட குமார் தர்மசேனா பெயரை Handunnettige Deepthi Priyantha Kumar Dharmasena எனவும், 49 எழுத்துக்கள் கொண்ட டிக்வெல்லா பெயரை Dickwella Patabendige Dilantha Niroshan Dickwella எனவும், 51 எழுத்துக்கள் கொண்ட ஹெராத் பெயரை Herath Mudiyanselage Rangana Keerthi Bandara Herath எனவும் பதிவிட்டு, டுவிட்டர் நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்