இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாரடைப்பால் மரணம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஏ.ஜி. மில்கா சிங் மாரடைப்பால் காலமானார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏ.ஜி. மில்கா சிங் (75). சென்னையில் பிறந்த இவர் சர்வதேச இந்திய கிரிக்கெட் அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 92 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவில் வாய்ப்பு கிடைக்காத போதும் 88 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள மில்கா சிங், 4324 ஓட்டங்களை குவித்துள்ளார்.

13வது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய மில்கா சிங், தனது 17-வது வயதில் மெட்ராஸ் அணிக்காக ரஞ்சிக்கோப்பை தொடரில் களமிறங்கினார்.

இவரது தந்தை ராம் சிங் 56 முதல் தர போட்டிகளிலும், சகோதரர் கிருபால் 14 டெஸ்டில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மில்கா சிங் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...