இலங்கை- இந்தியா முதல் டெஸ்ட்: மைதானத்தை ஆய்வு செய்த டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய வீரர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு மைதானத்தை ஆய்வு செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 16ஆம் திகதி இலங்கை அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ள ஈடன் கார்டன் மைதானத்தையே டோனி ஆய்வு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி, நேற்று கொல்கத்தா மைதானத்தில் மேற்கொண்ட ஆய்விற்கு பின், மைதானத்தின் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம், மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பாராட்டியதோடு, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, அதன் பின்னர் இந்தியாவில் அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகள் நடக்கும் மைதானங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்