என் வாழ்நாளில் அதை மறக்க முடியாது: தமிழ் தெரியும் என்று பதானியை பிரமிக்க வைத்த சச்சின்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் எனக்கும் தமிழ் தெரியும் என்று கூறி, தமிழக வீரர் பதானியை பிரமிக்க வைத்துள்ளார்.

இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய போட்டியில் மும்பை அணி தனது 500-வது போட்டியில், பரோடா அணியை எதிர் கொள்கிறது.

இதை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய சச்சின், தமிழக அணிக்கு எதிரான கடந்த 1999-2000ம-ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக்கிண்ணம் அரையிறுதியை என்னால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது.

அப்போட்டியில் தமிழக அணியின் தலைவர் பதானி, ஆடுகளத்தில் எனது அசைவுகளை கவனித்து பந்து வீச்சாளரிடம் முன்னாடி ...முன்னாடி...என தமிழில் தகவல் தெரிவித்தார்.

ஆனால் போட்டி முடிந்த பின் பதானியை அழைத்து எனக்கு தமிழ் தெரியும் என அவரிடம் தெரிவித்தேன், அவரும் தலையை அசைத்தபடி சென்றார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்