இந்தியாவை சமாளிப்பதற்கு சண்டிமால் வகுத்துள்ள பிளான்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இலங்கை அணியும் நேற்று கொல்கத்தா வந்தடைந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் 6 துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்கினோம், அதற்கு பலனும் கிடைத்தது.

நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி வெற்றி பெறுவது என்று கடினமான விடயம்.

ஆனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே சமயம் இந்திய அணியில் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளதால், அதை சமாளிப்பதற்கு துடுப்பாட்ட வீரர்கள் வேண்டும், இதனால் அணியில் சகல துறை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அன்றைய போட்டியின் போது, மைதானத்தின் தன்மையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும்.

இந்திய அணியின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவின் பந்து வீச்சுகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் கவனமாக இருப்பதாகவும், முடிந்த அளவிற்கு ஸ்வீப் சாட்டுகள் மூலம் சமாளிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்