இலங்கை அணியின் பயிற்சியாளராக சண்டிகா ஹத்துருசிங்க?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இலங்கை அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரரான சண்டிகா ஹத்துருசிங்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்து வரும் சண்டிகா ஹத்துருசிங்க, இதுவரையிலும் இலங்கை அணிக்காக 26 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

உலகளவில் பிரபலமான பயிற்சியாளர்களில் ஒருவராக திகழும் சண்டிகா ஹத்துருசிங்கவின் தலைமையில் வங்கதேசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இவரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், Dean Jones மற்றும் Jason Gillespie உள்ளிட்டோர் பரிசீலனையில் உள்ள நிலையில் பெரும்பாலும் சண்டிகா ஹத்துருசிங்கவே நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்