டோனி பேட்டிங் குறித்து கடும் விமர்சனம்: பதிலடி கொடுத்த கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்

டோனியின் துடுப்பாட்டம் குறித்தும் அவரது உடற்தகுதி குறித்தும் எழும் விமர்சனங்களுக்கு விராட் கோஹ்லி பதிலடி தந்துள்ளார்.

இந்திய வீரர் டோனி டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அணியிலிருந்து டோனி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய இந்திய அணித்தலைவர் கோஹ்லி, டோனி முழு உடல் தகுதியுடன் அனைத்து பரிசோதனைகளிலும் தெரிவு பெறுகிறார். களத்தில் அணிக்காக எப்படியெல்லாம் பங்காற்ற முடியுமோ அப்படியெல்லாம் பங்காற்றுகிறார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா தொடர்களில் டோனி நன்றாகத் தான் விளையாடினார். நியூசிலாந்து தொடரை பொறுத்தவரை அவருக்கு ஆடும் வாய்ப்பும் சரியாக அமையவில்லை.

எப்பொழுதும் ஏன் டோனி ஒருவரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? இதில் நியாயமில்லை. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

புத்திசாலியான டோனிக்கு அவரது ஆட்டம், உடல் தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியும் என கோஹ்லி கோபமாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்