நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதால், பாகிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் இரண்டு தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதால், பாகிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுடன் தொடர் தொடங்கிய போது நியூசிலாந்து அணி 125 புள்ளிகளில் இருந்தது.
தொடரில் தோல்வியை தழுவியதும் 120 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு சென்றது. இதையடுத்து மேற்கிந்திய தீவு அணி மூன்றாவது இடத்திலும் இங்கிலாந்து அணி 4 வது இடத்திலும், இந்தியா 119 புள்ளிகளுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.