துடுப்பாட்ட பயிற்சியாளர், தனஞ்சய டி சில்வா இல்லாமல் இந்தியா வந்தது இலங்கை

Report Print Santhan in கிரிக்கெட்
484Shares

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதிப்பதற்கு இலங்கை அணி, கொல்கத்தா வந்தடைந்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணியில் 15 வீரர்கள் அறிவிக்கபப்ட்டுள்ளனர்.

இதில் இலங்கை அணிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள துடுப்பாட்ட பயிற்சியாளர்திலன் சமரவீரர மற்றும் இளம் வீரர் தனஞ்சய டி சில்வாவைத் தவிர மற்ற வீரர்கள் கொல்கத்தா வந்தடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனஞ்சய டி சில்வா இலங்கை A அணிக்கு தலைவராக உள்ளார், தற்போது மேற்கிந்திய தொடரில் இலங்கை A அணி விளையாடியதால், அவர் நாளை அணியில் இணைவார் என்றும் அதே போன்று துடுப்பாட்ட பயிற்சியாளர் திலன் சமரவீராவும் நாளை அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்னர் இலங்கை அணி 2 பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது, அதில் முதல் ஆட்டம் நவம்பர் 11-ஆம் திகதி துவங்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்