நல்ல சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள்: மனம் நொந்து பேசிய முன்னணி கிரிக்கெட் வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
191Shares

பிற டி20 போட்டிகளில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் வெறும் மன்னிப்பு மட்டும் வழங்குதல் போதாது என அந்த அணியின் வீரர் டேரன் சமி கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சமி அளித்துள்ள பேட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தான் வீரர்கள் முதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் செய்வதென்னவோ முதலில் சம்பளத்தைக் குறைப்பதாக உள்ளது.

தனியார் டி20 தொடர்களை ஒப்பிடும் போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் அதிக சம்பளம் தரப்படுவதில்லை.

முந்தைய சி.இ.ஓ-வினால் தான் இந்தப் பிரச்சினை அனைத்தும் தொடங்கியது. இது தொடர்பாக இந்தியாவில் ஒரு தொடர் நடந்த போது நேர்ந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

சம்பளம் விடயத்தில் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்க முடியாதது என அப்போது கூறினேன். அதை ஏற்காத அவர்கள் 70% வீரர்கள் சம்பளத்தைக் குறைத்தார்கள். இதைத் தான் இன்னமும் செய்கிறார்கள் என சமி கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்