இந்த விடயம் எங்களை பதட்டமடைய செய்தது: வெற்றிக்கு பின்னர் பேசிய கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்
385Shares

மைதானம் ஈரப்பதமாக இருந்தது எங்களை பதட்டமடைய செய்தது என இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நேற்றைய ஆட்டம் மழை காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெற்றிக்கு பின்னர் பேசிய இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

மைதான பிட்ச் ஈரப்பதமாக இருந்தது எங்களுக்கு பதற்றத்தை கொடுத்தது, காரணம், பந்துவீச்சாளர்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்பதால் தான்.

ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். போட்டி நடந்த மைதானம் மிக அழகாக உள்ளது, இதற்கு முன்னர் இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை என்பதை கேட்கவே ஆச்சரியமாக உள்ளது என கோஹ்லி கூறியுள்ளார்.

கேரளாவில் அமைந்துள்ள கிரீன்பீல்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி தான் அங்கு நடந்த முதல் சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்