இங்கிலாந்தை மிரட்ட வருகிறார் ஸ்டார்க்: ஒரே போட்டியில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகள்

Report Print Santhan in கிரிக்கெட்
363Shares

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான Sheffield Shield தொடர் நடைபெற்று வருகிறது . இத்தொடரில் நியூசவுத் வேல்ஸ் அணியும், வெஸ்டர்ன் அவுஸ்திரேலிய அணியும் மோதின.

இதில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் விளையாடி வருகிறார்.

இவர் முதல் இன்னிங்ஸில் வெஸ்டர் அவுஸ்திரேலிய அணியில் Jason Behrendorff, David Moody மற்றும் Simon Mackin ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணி 176 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

Mitchell Starc with a #SheffieldShield hat-trick! 🔥🔥🔥

A post shared by cricket.com.au (@cricketcomau) on

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி நியூ சவுத் வெல்ஸ் அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

இந்த போட்டியில் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 41 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

சமீபகாலமாக ஸ்டார்க் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், வரும் 23-ஆம் திகதி துவங்க இருக்கும் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்டார்க்கின் இந்த இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் ஆஷஸ் தொடரில் ஸ்டார்க்கை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்