டோனி குறித்து மனம் வருந்திய சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
346Shares

சூதாட்ட விவகாரத்தில் டோனியும், டிராவிட்டும் தனக்கு ஆதரவளிக்கவில்லை என இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீசாந்துக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ தடை விதித்தது.

தடையை மீறி கேரளா உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மனு தாக்கல் செய்த நிலையில் தடை நீக்கப்பட்டது.

இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்த வழக்கில் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சூதாட்ட விவகாரத்தில் டோனி மற்றும் டிராவிட் தனக்கு ஆதரவளிக்கவில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக இருந்த ராகுல் டிராவிட் என்னை பற்றி நன்கு அறிந்தும் ஆதரவு தரவில்லை.

டோனிக்கு உணர்வுபூர்வமான தகவல் அனுப்பியும் அவர் எனக்கு ரிப்ளே செய்யவில்லை.

பி.சி.சி.ஐ ஒரு தனியார் நிறுவனம் தான், எனக்கு அது வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விளையாடுவேன், இல்லையெனில் வேறு நாட்டுக்காக ஆடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்