இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்ரோவுக்கு அடுத்த வருடம் அடிக்கப் போகும் ஜாக்பாட்

Report Print Santhan in கிரிக்கெட்
410Shares

இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்ரோ அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இத்தொடரில் நியூசிலாந்து அணி வீரரான முன்ரோ, இந்திய மண்ணில் அசத்தி வருகிறார். இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சுகளை ஸ்வீப் சாட்டுகள் மூலம் சமாளித்து ஆடி வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா போன்றவர்கள் விளையாடுவார்கள். இதனால் அவர்களை சமாளிப்பதற்கு, முன்ரோ சரியான வீரராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதனால் இவர் அடுத்த வருடம் நடைபெறும் ஐபில் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்றும், இவரை எடுப்பதற்கு அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்ரோ இதற்கு முன்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார், 4 போட்டிகள் விளையாடிய அவர் வெறும் 30 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் 2017-ஆம் ஆண்டு எந்த ஒரு அணியும் எடுக்க முன்வரவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்