இலங்கை ஜாம்பவான் டில்ஷான் சாதனையை முந்தினார் விராட் கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்
555Shares

சர்வதேச டி20 கிரிக்கெட்களில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்களில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானை வீராட் கோஹ்லி முந்தியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இரு தினங்களுக்கு முன்னர் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி 65 ஓட்டங்கள் எடுத்தார்.

12-வது ஓட்டத்தை கோஹ்லி தொட்ட போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதன் மூலம் இரண்டாவது இடத்திலிருந்த இலங்கை அணியின் ஜாம்பவான் டில்ஷான் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

நியூசிலாந்து அணியின் மெக்கலம் 2140 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், கோஹ்லி 1943 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், டில்ஷான் 1889 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் விராட் கோஹ்லி 7 ஆயிரம் ஓட்டங்களை தொட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்