இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: வாய்ப்பை இழந்த முக்கிய வீரர்கள்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், கவுஷல் சில்வா நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் வருகிற 16- ஆம் திகதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி நாக்பூரில் 24 ஆம் திகதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியில் டிசம்பர் 2- ஆம் திகதியும் தொடங்குகிறது.

இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபார்ம் இன்றி தவிக்கும் குசால் மெண்டிஸ் மற்றும் கவுஷல் சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக சகலதுறை வீரர்கள் தசுன் ஷனகா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள முன்னாள் அணித்தலைவர் மேத்யூஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

15 பேர் கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

1. தினேஷ் சண்டிமல், 2. திமுத் கருணாரத்னே, 3. தனஞ்ஜெயா டி சில்வா, 4. சதீரா சமரவிக்ரமா, 5. மேத்யூஸ், 6. லஹிரு திரிமன்னே, 7. ரங்கணா ஹெராத், 8. சுரங்கா லக்மல், 9. தில்ருவான் பெரேரா, 10. லஹிரு காமேஜ், 11. சண்டகன், 12. விஷ்வா பெர்னாண்டோ, 13. தசுன் ஷனகா, 14. நிரோஷன் டிக்வெல்லா, 15. ரோஷன் சில்வா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்