வங்கதேச வீரர் மனைவியை வறுத்தெடுத்த ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் மனைவியை ரசிகர்கள் வறுத்தெடுத்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான Taskin Ahmed(22), தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடர் முடிந்து நாடு திரும்பியவுடன், தனது நீண்டகால தோழியான Sayeda Rabeya Naima-வை கடந்த வெள்ளிக் கிழமை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் திருமணத்தில் தனது மனைவியான Sayeda Rabeya Naima-வுடன் எடுத்த புகைப்படங்களை அவரின் அட்மின், Taskin Ahmed பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இதைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் இதயம் நொறுங்கிவிட்டது, இவருக்கு என்று அழகிய பெண் ரசிகைகள் பலர் உள்ளனர்.

ஆனால் இவர் என்னவோ இப்படிப்பட்ட பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளாரே என்று அவரது முகம் போன்றவைகளை குறிப்பிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சில இணையவாசிகள் Taskin Ahmed உங்களுக்கு தற்போது தான் 22 வயதாகிறது அதற்குள் ஏன் இந்த அவசர திருமணம்? இருப்பினும் வாழ்த்துக்கள்.

இதைவிட்டு விட்டு கிரிக்கெட்டை பாருங்கள் எனவும், உங்கள் வாழ்க்கையையை நீங்களே கெடுத்துக்கிட்டீங்களே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்