இந்திய தொடரில் ரங்கன ஹெராத்தின் கனவு: ஆசை நிறைவேறுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது தான் என்னுடைய கனவு என்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெராத் கூறியுள்ளார்.

இந்த வருடம் இறுதியில் இலங்கை அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

சொந்தமண்ணில் தொடரை இழந்த இலங்கை அணி, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹெராத், நாங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தி அசத்தினோம்.

ஆனால் நாங்கள் இன்னும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மண்ணில் தான் தொடரை கைப்பற்றவில்லை. அதனால் அது தான் என்னுடைய கனவு, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நாங்கள் கைப்பற்ற வேண்டும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால், எங்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், நிச்சயம் வெல்லுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்