சென்னை சூப்பர் கிங்ஸிலும் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் பரபரப்பு

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீசாந்த்.

2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார், இதனை தொடர்ந்து பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வாழ்நாள் தடை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில், சூதாட்ட புகார் பட்டியலில் என்னுடன் 13 வீரர்கள் இருந்தனர்.

எனக்கு மட்டும் ஆயுள் தடை விதித்து மற்றவர்களை விளையாட அனுமதித்துள்ளனர், அவர்களது பெயர் எனக்கு தெரியாது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளும் இரண்டாண்டு தடைக்கு பின்னர் விளையாடவுள்ளனர்.

சென்னை சூப்பர் அணியில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள், எனக்கு மட்டும் தடை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்