போட்டியின் நடுவே மைதானத்திற்குள் பாய்ந்த கார்: பதற்றமடைந்த இந்திய வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரின் போது, போட்டியின் போது நடுவில் கார் திடீரென உள்ளே வந்தால் மைதானத்தில் இருந்த வீரர்கள் பதற்றமடைந்தனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ரஞ்சி டெஸ்ட் தொடர் இந்தாண்டும் நடைபெற்றது.

அதன் படி டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநில அணிகள் மோதிய போட்டி பாலம் விமானப்படை மைதானத்தில் நடைபெற்றது.

ஏனெனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றதால் இப்போட்டி இங்கு மாற்றப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய வீரர்களான கம்பீர், இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென்று மாலை 4.40 மணி அளவில் மைதானத்தின் நடுவே டிரைவர் ஒருவர் காரை ஓட்டி வந்ததால், மைதானத்தில் இருந்த வீரர்கள் பதற்றமடைந்தனர்.

அதில் சில வீரர்கள் காரில் சென்ற நபரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிறுத்தாமல் சென்றதால், நடுவர்கள் மற்றும் காவலர்கள் ஒருவழியாக அவரை நிறுத்தினர்.

அதன் பின் காரை ஓட்டி வந்த நபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார். இதனால் போட்டி 20 நிமிடங்கள் தாமதத்திற்கு பின் நடைபெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...